தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் கைது

விடுதலைப் புலிகளை மீண்டும் முகநூல் வாயிலாக புதுப்பித்த குற்றச்சாட்டில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார. மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் முகநூல் வழியாக விடுதலைப் புலிகளை மீண்டும் புதுப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டின் பேரில் 3 மாத கால பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியினை பெற்று நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தன