தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்திப்பு

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. குறித்த கூட்டம் கடந்த 15ம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், அழைப்பு விடுக்கப்பட்டதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அன்றைய தினம் இடம்பெற்றிருக்கவில்லை.