தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்

திராவிடக் கட்சிகள் பிரமுகர் கட்சிகளாக தங்களை காட்டிக்கொள்வார்கள். ஆனால் காரியம் ஏதும் ஆகவேண்டும் என்றால் இவர்களையே பிடித்தாகவேண்டும். இதில் பெரியார் வழி வந்த தி.க. உறுப்பினர்கள் பலர் கொள்கைப் பிடிப்புடன் இன்றுவரை செயற்படுகின்றார்கள். இவர்களின் பல திருமணங்களில் கலந்து கொண்டுள்ளேன். தாலி கட்டமாட்டார்கள். மதச் சடங்குள் ஏதும் செய்யமாட்டார்கள். தி.க. வில் உள்ள ஒரு தலைவர் முன்னிலையில் மாலையை மட்டும் மாற்றிக் கொள்வார்கள். திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் பற்றி திருமணவிழாவிற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்துரை மாதிரியான முற்போக்கு கருத்துக்களைத் தெரிவித்து பேசுவார்கள். புது வாழ்வை ஆரம்பிப்பவரகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பார்கள். வேலை வாய்பு வீடு அமைப்பது அல்லது குறைந்த வாடகைக்கு பிடித்துக் கொடுத்தல் போன்றவை. எங்களையும் மிகவும் மரியாதையுடன் தோழமையுடன் நடாத்துவார்கள்.

நாம் பொது வெளியில் இடதுசாரிகளாக இருப்பதுவும் ஈழவிடுதலையில் பங்கு பற்றுவதும் அவர்களிடத்து எமக்கான மரியாதைகளை சற்றே உயர்த்தி வைத்திருந்தது என்னமே உண்மைதான். இவர்களின் திருமண விழாவில் கலந்து கொள்வது ஒதுவித புது அனுபவங்களாக இருக்கும். மிகவும் நல்ல மனிதர் குழாத்தை இவ்விடத்தில் காண முடியும். இவர்கள் தேர்தல் திருவிழாவில் கலந்து கொள்ளமாட்டார்கள். இவர்களும் பெரியாரிஸம் கதைபதுடன் தற்போதைய ஆட்சியில் உள்ளவர்களைப்பற்றி நம்பிக்கையீனம் தெரிவிப்பர் பெரியார் வழியில் சென்று சமூக மாற்றத்திற்காக செயற்படுவதாக அறை கூவல் விடுப்பர்இ ஆனால் தற்போதெல்லாம் கி.வீரமணி தேர்தலில் பங்குபற்றாத ஒரு அரசியல் பிரமுகராகவே செயற்படுகின்றார் ஆனால் இன்னமும் இதன் உறுப்பினர்கள் பலர் பெரியாரிஷத்தை கடைப்பிடித்தே வாழுகின்றனர். இது ஒருவகை சீர்திருத்த வாழ்க்கை முறையாக மட்டும் அமைகின்றது