தமிழ் பெண்களுக்கு பாலியல் துன்பம்

யுத்தம் காரணமாக பாதிப்புக்கு முகங்கொடுத்த தமிழ் பெண்கள், தற்போது அவர்களது சமூகம் மற்றும் படையினரின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக நல்லிணக்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அரச சேவை பெற்றுக்கொடுக்கும் ​போது பாலியல் இலஞ்சம் கேட்கும் அதிகாரிகள் ஊடாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் பெண்களில், 37 வருட கால யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்கள் உள்ளதாக, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.