தா. பாண்டியன் தோழருக்கு எமது அஞ்சலி

தோழர்கள் S.A.டாங்கே, M.கல்யாணசுந்தரம் மற்றும் மொகித்சென் ஆகியோரின் வழிகாடுதலை ஏற்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தோழர் தா.பா அவர்கள் செயல்பட்ட காலத்தை என்றென்றும் மதிப்புடன் நினைவில் கொள்வோம். UCPI ன் சார்பாக வட சென்னை தொகுதியிலிருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோழர் தா.பா.

அவர் எழுதிய பொதுவுடமையரின் எதிர்காலம் நூல் இந்திய கம்யூனிஸ்ட்களின் கடந்த கால,நிகழ்கால செயல்பாடுகள் குறித்தான அவரது விமர்சன பார்வையை தோழர் M.k யிடம் அவர் பயின்ற அரசியல் பாடத்தையொட்டி அவரது மனசாட்சியின் குரலாக ஒலித்தது.
ஈழத்தின் மிகச்சிறந்த மார்க்சிய போராளியாகத் திகழ்ந்த தோழர் பத்மநாபா பாசிச வெறியர்களால் கொல்லப்பட்ட சமயத்தில் அன்றைய EPRLF இயக்கத்தினருடன் UCPI தலைவராக தோழர் தா.பாண்டியன் காட்டிய தோழமை உணர்வை என்றும் நினைவில் கொள்வோம்.

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தோழர் க.பட்டாபிராமன், மாநில செயலாளர் தோழர் மா.சுந்தராஜன் மற்றும் UCPI கட்சியின் சார்பாக மறைந்த தோழர் தா.பா அவர்களுக்கு அஞ்சலியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எங்கள் உணர்வுபூர்வமான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

S.பாஸ்கரன்(UCPI)