திருகோணமலையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

திருகோணமலையில் இன்று நடைபெற்ற தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக பெண்களின் பிரசன்னம் அதிகமாக இருந்தது. இதில்  கட்சியின் தலைவர் சுகு சிறீதரன் உரையாற்றினார் ஊழல் அற்ற வினைத்திறன் மிக்க உள்ளுராட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த தாம் செயற்படப் போவதாக இதில் மக்கள் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மக்களுடன் இணைந்து மக்களுக்கான ஆட்சியை அமைகப் போவதாக முன்னாள் வடக்கு கிழக்குமாகாண முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் தனது உரையில் தெரிவித்தார் மேலும் திருகோணமலை நகர சபையின் முதன்மை வேட்பாளர் சத்தியன் சிவகுமார் தான் தொடர்ந்தும் திருகோணமலை மக்களுடன் இணைந்து பல்வேறு மக்களுக்கான பணிகளை செய்துவருவதாகவும் பாடசாலைப் பிள்ளைகளுக்கான உபகரணங்கள் சீருடைகள் பெண்தலைமத்துவக் குடும்பங்களுக்கான செயற்திட்டங்கள் இளைஞர்களை சமூகத்தில் முன்னிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார். கூடவே தன்னுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றிவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஊள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களையும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்