தீர்வுத்திட்டத்தை முந்திக் கொடுப்பது யார்…?

நாரதர் தீர்வு மாங்கனியைக் கொண்டு வந்து அம்மை அப்பனாம் ரணில், மைத்திரியிடம் கொடுத்து இது தகுதியுள்ளவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று கொடுக்க…

சரியான தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வருகின்றவர்களுக்கே ‘தீர்வு மாங்கனி’ என்று அம்மை அப்பன் மொழிந்திட்டனர்.

உடனே சம்பந்தர், ஏறுமயிலின் கரியரில் சுமந்திரனையும் ஏற்றிக் கொண்டு உலகத்தைச் சுத்தி வந்து தீர்வுத் திட்டம் காண இசுக்கோத்துலாந்துக்கு போய் விட்டார்.

ஆனால் விநாயகர் விக்னேஸ்வரனோ, யாழ்ப்பாணம் தான் எனக்கு உலகம், கிழக்கோ, வன்னியோ இல்லை என்று யாழ்ப்பாணத்திற்குள் சுத்தி உடனடியாக தீர்வுத்திட்டத்தைக் கொண்டு வந்து விட்டார்.

ஆனால் இப்போது அம்மையப்பனிடம் கொண்டு போய் காட்ட வேண்டுமே!

பிள்ளையார் முறிகண்டி தாண்டுமுன் சம்பந்தர் வந்திறங்கியிடுவாரோ என்று அவசரமாய் சம்பந்தி வீட்டுக்குப் போய் கொண்டிருக்கிறார்;.

இவர்கள் எல்லாம் வருமுன்னால் மாங்கனி அழுகி விடுமோ?
இரண்டு பேருக்குமே பிரிச்சுக் குடுக்கப் போய், கடைசியில் குரங்கு அப்பம் பிட்ட கதை போல ஆகி விடுமோ, என்னவோ?

(RC George)

இதற்கு எல்லாம் முதலில் வரதராஜயப்பெருமாள் கொடுத்துவிட்டாரே. விநாயகமூர்த்தியும் கொடுத்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அம்மை அப்பனின் பிள்ளைகள் கொடுத்தால்தான் மாங்கனியா மற்றதெல்லாம் வேறு கனியா…? அல்லது சுற்றி கொடுத்தவற்றைதான் சுத்தலாம் என்று மற்றயவற்றை மறைத்து விட்டாரோ ரணில் .
(Siva Easwaramoorthy)