துணைவேந்தராக மங்களேஸ்வரன் நியமனம்

வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கலாநிதி ரி. மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வராக நீண்ட காலமாக கடமையாற்றிய கலாநிதி ரி. மங்களேஸ்வரன், வவுனியா பல்கலைக்கழக உருவாக்கத்துக்கு அயராது உழைத்தவராவார்.