துனீஷியாவில் நெருக்கடியில் ஜனநாயகம்

துனீஷியாவானது கடந்த பத்தாண்டில் அதன் மிகப் பெரிய ஜனநாயக நெருக்கடி ஒன்றை இன்று எதிர்கொள்கின்றது. அரசாங்கத்தை ஜனாதிபதி கை சயீட் கலைத்ததுடன், பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை முடக்கியதையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.