துருக்கியிடம் காபூல் விமான நிலையம்?

வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) நட்புறவு நாடுகள் ஆதரவளித்தால், ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை ஏற்க துருக்கிப் படைகள் இணங்கியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் தெரிவித்துள்ளார். நேட்டோ நட்புறவு நாடுகளுடனான சந்திப்பொன்றிலேயே குறித்த கருத்தை அகர் வெளிப்படுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள இவ்விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அங்குள்ள 500 துருக்கிப் படைகள் ஏற்குமென அகர் தெரிவித்துள்ளார். நிதி, உபகரண, அரசியல் ஆதரவானது நட்புறவு நாடுகளால் வழங்கப்பட்டாலேயே பொறுப்பை துருக்கி ஏற்குமென அகர் கூறியுள்ளார்.