’தேசிய ரீதியான போராட்டத்துக்கு வடக்கின் ஆதரவும் வேண்டும்’

அதேபோல ஆசிரியர்கள், அதிபர்கள் இந்த காலத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதை தவறு என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் கூறினார். யாழ்ப்பாணத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வடமாகாணத்தில், 13 கல்வி வலயங்கள் செயல் நிலையில் உள்ளன எனவும் 30 வருடங்களாக காணப்படுகிற சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண வேண்டுமாயின், அனைத்து ஆசிரியர்களும் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் தமக்கு அதற்குரிய பலன் கிடைக்கும் எனவும், புயல்நேசன் கூறினார்.