ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்றும் (29) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (22) ரூ. 298 ஆக இருந்த டொலரின் பெறுமதி வெள்ளிக்கிழமையளவில் (26) ரூ.292 ஆக சரிவடைந்தது. இன்று (29) டொலரின் பெறுமதியானது மீண்டும் ரூ. 280 ஆக குறைவடைந்துள்ளது.