தொண்டீஸ்வரம் இலங்கையின் தொன்மையான பஞ்ச ஈச்சரங்களுள் ஒன்றாக தென் பகுதியில் உள்ள தேவேந்திர முனையில் மாத்தறையில் காணப்பட்டதாகவும் போர்த்துக்கீசர் காலத்தில் அழிவுற்றதாகவும் வரலாறு கூறுகிறது.

தேவேந்திர முனைப்பகுதியில் கோபுரமும் விக்கிரகங்களும் அகற்றப்பட்டு வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இன்றி தொல் பொருளியல் திணைக்களத்தினால் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் புராதன சிவாலயங்களை ஒத்திருக்கும் இந்தக் கட்டிடம் ஏன் தொண்டீஸ்வரத்தின் சிதிலமாக இருக்கக் கூடாது ? அருகாமையில் வசிக்கும் தென் பகுதி மக்களினால் இது இராவணனினால் வழிபட்ட தலமாக கருதப்படுகிறது. இதை ஆய்வு செய்வதற்கு தமிழ் ஆர்வலர்கள் முன்வரவேண்டும்