‘தோட்ட வீடமைப்பு முறையில் திருத்தம்’

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், சகல பெருந்தோட்ட மக்களையும் அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்துக்கொடுப்பதை இலக்காக் கொண்டு, தற்போது காணப்படும் தோட்டத் தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

இதற்கான காரணம் அரசாங்கத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச்சஸ் காணி மற்றும் 550 சதுர அடிக்குள் வீடுகளை அமைத்துக்கொடுக்க இணக்கம் தெரிவித்தது. அதேபோல் இந்திய அரசாங்கமும் மேலதிகமாக 550 அடி சதுர அடிக்குள் வீடுகளை நிர்மாணித்து கொடுக்க இணக்கம் தெரிவித்தது.

எனினும், எந்த இடமென அதில் குறிப்பிடப்படாததால், அரசாங்கம் இந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் ஒன்றாக இணைத்து பெருந்தோட்ட மக்களுக்கு 7பேர்ச்சஸ் காணியை வழங்குவதுடன், அவர்களின் கால்நடை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக 3 பேர்ச்சஸ் காணியை வழங்கவும் குறித்த 550 சதுர அடி வீட்டுக்கான அத்திபாரத்தில் மேலும் 550 சதுர அடி பரப்பில் மற்றுமொரு மாடி வீட்டை அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கி, தேவையேற்படும் போது பயனாளிகள் அதில் வீட்டை அமைக்கும் வகையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த திருத்த யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டது என்றார்.

தற்போதுள்ள லயன் அறைகளை அகற்றி குறித்த இடத்திலேயே புதிய வீடுகளை அமைத்தல்

• வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் ஆபத்துக்கள் இருப்பின், மற்றும் லயன் அறைகள் அமைந்திருக்கும் இடங்களில் இடவசதிகள் போதுமானளவு இல்லாவிட்டால் வேறு இடங்களில் வீடமைப்பை நிர்மாணித்தல்

• பிற்காலத்தில் குறித்த வீடுகளை இருமாடி வீடுகளாக நிர்மாணிக்கக் கூடிய வகையில் 550 சதுர அடிகளைக் கொண்ட வீட்டின் முதலாம் கட்டத்துக்காக 1.3 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணித்தல்

• கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்துக்காக மேலதிகமாக 03 பேர்ச்சர்ஸ் காணியை ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் ஒதுக்கி வழங்கல்

• வீடமைப்புக்கான பெறுமதியின் 50சதவீதத்தை பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுவதற்கும்,அதற்காக 20 வருடகாலம் வழங்குதலும்

• லயன் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வரைக்கும் வேறு இடத்தில் தற்காலிகமாக வசிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல் போன்ற திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.