தோழருக்கு அஞ்சலி

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்தும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை நிலை நிறுத்தவும் துணிச்சலாக முன் வந்து விசுவாசத்தோடு செயற்பட்டவர் தோழர் லிங்கன். இதனால் அவரது குடும்பம், உறவினர்கள் மட்டுமல்ல தோழர் லிங்கனின் வாழ்ந்த கல்லாக்கட்டுவன் கிராமமே சொல்லொணா துயரங்களை எதிர்கொண்டது.

நாடு கடத்தப்பட்டும், உயிரிழப்புகளை எதிர்கொண்டும் அல்லல்களுக்குள்ளானவர்களின் துயரம் இன்னும் தொடர்கின்றது. மக்கள் நலன் சார்ந்தும் அமைப்பு சார்ந்தும் நம்பிக்கையோடு தொடர்ந்து செயற்பட்ட தோழர் லிங்கனுக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.