தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளிவந்துள்ளது

 

இலங்கை மார்க்சிய – லெனினிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யின் முக்கிய செயற்பட்டாளரும், ‘தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) ‘தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி’ (PLFT) என்ற அமைப்புகளை ஸ்தாபித்து வழிநடாத்தியவருமான தோழர் வி.விசுவானந்ததேவன் மறைந்து இவ்வருடம் (15.10.2016) முப்பது ஆண்டுகளாகின்றன.

இவரை நினைவுகூரும் முகமாக இருபத்தைந்து பேர்கள் எழுதியுள்ள நினைவுக்குறிப்புகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது இலங்கையின் கால் நூற்றாண்டுகால யுத்தம், இவரைப் போன்ற பல உண்மையான மக்கள் போராளிகளை மறக்கடிக்கச் செய்துவிட்டது. அதனால் இந்த அவரது நினைவு நூல் அவரின் வரலாற்றினை சொல்ல விழையும் ஒரு சிறு முயற்சியெனக் கொள்ளலாம். இந்நூலினைப் பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: aaivakambooks@gmail.com