நயன்தாராவை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசிப்பவர்களும் சினிமாவுக்கே அவமானச் சின்னங்கள்: குஷ்பு

நயன்தாராவை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசிப்பவர்களும் சினிமாவுக்கே அவமானச் சின்னங்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். ‘கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.