நாட்டை மீட்க தேசிய மக்கள் சக்தியால் முடியும்: அனுரகுமார

வங்கி மற்றும் நிதித்துறைசார் தொழிற்சங்கங்களுடன் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இயலுமையை நன்கு அறிந்து அதற்கு அமைவாக செயற்படுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் அதனையே தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.