நான்காவது தடவையாக வென்ற அசாட்

குறித்த வெற்றியின் மூலம் 55 வயதான அசாட், மேலும் ஏழு ஆண்டுகளுக்கு தனது ஆட்சியை நீடித்துள்ளார். முன்னாள் பிரதி அமைச்சரவை அமைச்சர் அப்டல்லாஹ் சலெளம் அப்டல்லாஹ், சிறிய எதிர்க்கட்சித் தலைவரான மஹ்மூட் அஹ்மட் மரேய்க்கெதிராக அசாட் போட்டியிட்டிருந்த நிலையில், 3.3 சதவீதமான வாக்குகளை மரெய்யும், 1.5 சதவீதமான வாக்குகளை சலெளமும் பெற்றிருந்தனர்.