நாளை ( சனிக்கிழமை) நிகழ்வு – ஈஸ்தாம்

மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான 1000/= சம்பளக் கோரிக்கைக்கான எமது ஒருமைப்பாடும், அக்கோரிக்கையின் பின்னுள்ள அடிப்படை நியாயங்களுக்கான முன்வைப்புகளும்….

கலந்துரையாடலும் கருத்துக்களும்…

உழைக்கும் மக்கள் பிரிவினரைச் சேர்ந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், தமது அடிப்படை கோரிக்கையான நாளொன்றுக்கான 1000/= சம்பளக் கோரிக்கையை முன் வைத்து தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை தீர்க்க அரசாங்கமோ, தோட்டக் கம்பனிகளோ இன்னும் முன் வரவில்லை.இக்கோரிக்கையை நிறைவேற்றுவதை திசை திருப்புவதற்காக இழுத்தடிப்புகளையும் , பல திரைமறைவு வேலைகளையும் செய்து வருகின்றன.

இம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையில் மக்கள் அமைப்புகள், தொழிற்சங்கள் , சில அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

புலம்பெயர் நாட்டில் இம்மக்களின் கோரிக்கைக்கு பின்னுள்ள நியாயங்களை முன்வைத்து , இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும்ஒருமைப்பாட்டு நிகழ்வு இது.

காலம் -19 ஜனவரி 2019 சனி ,மாலை 3 மணி
இடம்- 317, 1st Floor ,High Street North,Eastham

அழைப்பு -Solidarity For Malayagam
மலையக ஒருமைப்பாட்டிற்கான அமைப்பு

More information contact -07817262980, ‭07883 474924‬