நாளை வருகிறது அமெரிக்க கப்பல்

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, யூஎஸ்எஸ் பிராங் கேபிள் (ஏஎஸ்-40) கப்பல், நாளை திங்கட்கிழமை (29) கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காகவும் சாதாரண துறைமுக விஜயத்துக்காகவுமே கப்பல் வரவுள்ளது. குறித்த கப்பலானது, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவுகளில் நிலைநிறுத்தப்பட்டு, இந்து.ஆசிய-பசுபிக் வலயத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கப்பலாகும். ரணில் அரசின் அமெரிக்க சார்பு அரசயின் மெதுவான் காய் நகர்தலின் ஒருவடிவமாக இதனை அரசியல் அவதானிகள் பார்க்கின்றனர்