‘‘நிறுத்திக் கொள்ளுங்கள்’’- விமானப்படை தாக்குதல் குறித்து சீனா கருத்து

இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதன் மூலம் இந்தப் பகுதியில் அமைதி நிலவ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.