நீர்கொழும்பில் புதிதாக 23 தொற்றாளர்கள்

இவர்களில் 11 பேர் தலாதூவ தொழிலாளர் வீடமைப்பு தொகுதியைச் சேர்ந்தவர்களாவர். இந்த வீடமைப்பு தொகுதியில் வசிப்பவர்களில் அதிகமானவர்கள் நீர்கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது. நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவில் இதுவரை 391 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.