நீர்கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்
டுக்குதல்களையடுத்து, நீர்கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது. நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுவதுடன், நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடவடிக்கைகளும் மந்த கதியில் காணப்படுவதுடன், ஓட்டோ சாரதிகள் தொழில் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.