படுகொலை நினைவுதினம்…

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது, இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 21 வைத்தியசாலை பணியாளர்களின் நினைவுதினம், இன்று புதன்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68 பேரைச் சுட்டுக்கொலை செய்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களில் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த அனுஷ்டிப்பு நிகழ்வில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

புலிகள் இயக்கத்தினர் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து இந்திய இராணுவத்திற்கு எதிரான தாக்குதலை நிகழ்த்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த புலிகளின் செயலை வைத்தியசாலை ஊழியர்கள் எதிர்த்தபோதும் அவர்களால் புலிகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்கு பதில் தாக்குதல் நடாத்த புறப்பட்ட இந்திய இராணுவம் வைத்தியசாலை ஊழியர்களையே இறுதியில் பலியெடுத்து