பட்டம் விடுவோம்…

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் மாபெரும் இராட்சத பட்டங்கள் ஏற்றும் போட்டி வெள்ளிக்கிழமை (15) மாலை இடம்பெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் பட்டப்போட்டிகள் வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் இடம்பெற்றது. இந்த பட்டப்போட்டியில் பல வடிவங்களை கொண்ட இராட்சத பட்டங்களை போட்டியாளர்கள் வானில் பறக்க விட்டனர்.