பதில் முதலமைச்சராக மறுதபாண்டி​ ராமேஸ்வரன்

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளமையால், பதில் முதலமைச்சராக, மத்திய மாகாண தமிழ் கல்வி இந்து கலாச்சார மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மருதுபாண்டி ராமேஸ்வரன், நாளை (21), கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை, மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.
சத்திவேல், ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில், இன்று (22) நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இரண்டாம் அமர்வான, “தேயிலை வளர் நாடுகண்டோர்” எனும் தொனிப்பொருளிலான அமர்வின் போது, தெரிவித்தார்.