பயணக் கட்டுப்பாட்டை இஸ்ரேலும் தளர்த்தியது

அறுகம்பே பகுதிக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையில் இஸ்ரேல் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளது. மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் தனது பிரஜைகளுக்கு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.