பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் அவலநிலை!

அஹமதியர்கள், இஸ்லாத்தின் அடிப்படையிலிருந்து விலகும், மிர்ஸா குலாம் அஹமட்டின் போதனைகளைப் பின்பற்றுவதால் அவர்கள், முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அத்துடன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

அண்மைய கணக்கெடுப்புகளின் அடிப்படையில், சிறுபான்மை சனத்தொகையில் 92 சதவீதமானவர்கள் இந்துக்களும் கிறிஸ்தவர்களுமாவர். 

பாகிஸ்தானின் மொத்த சனத்தொகையில் சுமார் 3.6 மில்லியன், இந்துக்கள் 1.7 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 1.3 சதவீதமும் அடங்குவர். ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களாவர். 

இந்துக்களும் கிறிஸ்தவர்களும் அவர்களின் மத நம்பிக்கை காரணமாக பாரபட்சமாகக் கவனிக்கப்படும் அவல நிலையில் உள்ளனர். முக்கிய பொது நிறுவனங்களில் இச்சமூகங்களின் குறைந்த அளவிலான அல்லது பூஜ்ய பிரதிநிதித்துவத்தால் சிறுபான்மை மதத்தவர்களின் கவலை அதிகரிக்கிறது.
 
பாகிஸ்தானின் அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு சம உரிமை வாய்ப்பு, சமுக, பொருளாதார, அரசியல் நீதி, கருத்து சுதந்திர வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு பங்குபற்றல் என்பவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 

எவ்வாறாயினும் இந்த விதிகள் நடைமுறையில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அவை அரசியலமைப்பின் பிற விதிகளால் முரண்படுகின்றன.

முதலாவதாக விதி 2இல், இஸ்லாம், நாட்டின் பிரதான  மதமாக இருக்கும் என்று கூறுகிறது. விதி 31இல் இஸ்லாமிய வாழ்க்கை முறையை வளர்ப்பது அரசாங்கத்தின் கடமை என்று கூறுகிறது. விதி 41(2) முஸ்லிம் அல்லாதவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படக்கூடாதென்று கூறுகிறது.

விதி 227(1) நடைமுறையில் உள்ள எல்லா சட்டங்களும் திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ள இஸ்லாமிய கட்டளைகளுக்கு அமைய கொண்டுவரப்படவேண்டும். 

பாகிஸ்தான் ஒரு பல்வேறு மொழிகள் கொண்ட நாடாகும். முழு சனத்தொகைக்குமான பொதுவான மொழி இல்லை. (என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, ஜனவரி 29 – 2021) பாகிஸ்தானின் தேசிய மொழி உருது ஆகும். அப்படியிருந்தும், அது சனத்தொகையில் 08 சதவீதமானவர்களினது தாய்மொழியாகும். 

சனத்தொகையில் அரைவாசிப் பேர் பேசும் மொழி பஞ்சாபி, அதைத் தொடர்ந்து சிந்தி (12 சதவீதம்) சரைக்கி (10 சதவீதம்) மற்றும் பாஸ்து (08 சதவீதம்). 

உத்தியோகபூர்வ மொழி ஆங்கிலமாகும். (உலக அரசியல் கையேடு, சி.ஐ.ஏ., 22 ஜனவரி – 2021) 

அவதூறு குற்றச்செயல்கள்

அரசியலமைப்புக்கு மேலாக பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அவை பாகிஸ்தானின் சமய சிறுபான்மையினருக்கு எதிராக அமைந்தன. ஜெனரல் ஸியாஉல் ஹக்கின் ஆட்சியின் கீழ் (ஜனாதிபதி 1977 – 1988) அரசாங்கம், பாகிஸ்தானின் சிவில் மற்றும் குற்ற சட்டங்களில் நன்மை எதுவும் செய்யவில்லை.

பாகிஸ்தானின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களை ஷரியா சட்டத்துக்கு அமைய கொண்டுவர எந்த முயற்சியும் செய்யவில்லை. முஸ்லிம் அல்லாதவருக்கு சுதந்திரங்கள் கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டது. 

உதாரணமாக 1979இல் ஹூடூட் கட்டளைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மற்றும் 1980இல் சமய ரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட தண்டனைகள் (அவை, தூக்கு, உறுப்பு துண்டித்தல் போன்ற தண்டனைகள் உட்பட்டதாகும்) ஷரியா சட்டத்தின் கீழ் இவை கொண்டுவரப்பட்டன.

ஷரியா சட்டத்தின் கீழ், போதைவஸ்து பாவனை, திருட்டு, விபசாரம், பொய்சாட்சியம் உட்பட பல குற்றச்செயல்கள் நியமிக்கப்பட்டன. மேலும் 1947ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பல தசாப்தங்களாக இராணுவ ஆட்சியைக் கண்டது. பலவீனமான நிதித்துறை பல்வேறு அரசியல் அமைப்பு மாற்றங்கள் என்பன பிரதானமாக சிறுபான்மை இனங்களின் குரலை நசுக்குவதாக இருந்தது.

பாகிஸ்தான் தண்டனைச்சட்டம் அத்தியாயம் 15 (Chapter XV) சமயம் தொடர்பான குற்றங்கள் அடங்கும். சர்வதேச நீதிபதிகள் ஆணைய கூற்றுப்படி புகழ்பெற்ற 60 சட்ட வல்லுனர்களைக் கொண்ட ஒரு சர்வதேச அரசு சாரா மனித உரிமை அமைப்பு பாகிஸ்தானில் உள்ள அனைத்து மதங்களுக்கும் எதிரான குற்றங்களும் பொதுவாக அவதூறு குற்றங்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.

பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் விதிகள் இஸ்லாம் மட்டுமல்லாத எந்த மதத்தையும் அவமதிப்பதை தடை செய்கிறது. இக்குற்றத்துக்கு பத்து ஆண்டுகள் வரை சிறையும் அதனுடன் அபராதமும் விதிக்கப்படலாம். புனித நபிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிடுவது சட்டவிரோதமாகும். இவை இஸ்லாம் மட்டுமல்லாது எந்த மதத்தையும் அவமதிப்பதை தடைசெய்கிறது. இதற்கு பத்து வருடம் வரை தண்டனை விதிக்கப்படலாம். 

தெய்வ நிந்தனைக்கு தண்டனை மரணம். புனித குர் ஆனை மாசுபடுத்துவது ஆயுள் தண்டனைக்குரிய குற்றம். மற்றும் எந்த ஒருவரினதும் புனித பெயர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் கலீபாக்களின் புனித பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் குற்றங்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்த சட்டங்கள் பற்றி நெதர்லாந்து வெளியுறவு அமைச்சு, 2020ஆம் ஆண்டு டிசெம்பரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள அஹமதியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பற்றி விபரிக்கையில், இந்த சட்டப்பிரிவானது சமச்சீரற்ற குறைபாடுகள் மிக்கதாகும். ஏனெனில் முகம்மது நபியையும் குர் ஆனையும் அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றங்களாகும். ஆனால் இயேசுவையோ, கிறிஸ்தவத்தையோ அல்லது பைபிளையோ அவமதிக்கும் குற்றங்களுக்கு இதனோடு ஒப்பிடக்கூடிய எந்த தண்டனையும் நியமிக்கப்படப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகளுக்காக வாதாடும் பாகிஸ்தானிய தொண்டு நிறுவனமான சமூக நீதிக்கான நிலையம் (சி.எஸ்.ஜே) பாகிஸ்தானில் 1987 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அவதூறு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 1572 பேரின் குற்றச்செயல் விவரங்களை ஆய்வு செய்தது. 

அந்த ஆய்வில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் (46.3சதவீதம்) முஸ்லிம்கள் என்று புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அதிகமானவர்கள் (51.9 சதவீதம்) பல்வேறு சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்தவர்களாவர். 2019 டிசம்பரில் வெளியான சி.எஸ்.ஜே அறிக்கை இதனைத் தெரிவிக்கிறது. 

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சதவீதத்தில் 51.9 ஆக சிறுபான்மை சமூகத்தவர் எண்ணிக்கை அதிகமானதாக தெரிந்தபோதிலும், மொத்த தேசிய சனத்தொகையில், அவர்கள் 5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஆவர்.

2020ஆம் ஆண்டு ஓகஸ்டில் சர்வதேச மனித உரிமைகள் சங்கம் (ஏஐ) நாடு முழுவதும் அவதூறு குற்றச்சாட்டுக்கள் அதிகளவில் சாட்டப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டது. 

பாகிஸ்தான் மனித உரிமை ஆணைக்குழு இதுபற்றி மிகுந்த கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்தது. இத்தகைய அவதூறு குற்றச்சாட்டுகளின் கீழ் (ஓகஸ்ட் 2020இல்) 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு அவதூறு சட்டங்கள் தொண்டு நிறுவனங்கள், சிறுபான்மை இனத்தவர், கல்வியாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக பாய்கின்றன. இது கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்கு எதிராகத் தெரிகிறது. 

வேலைவாய்ப்பு கொள்கையில் பாரபட்சம்

ஜெனரல் ஸியா உல் ஹக்கின் ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை வேலைவாய்ப்பில் பாகுபாடுகளைத் தடுக்கும் வகையில் ஒதுக்கீட்டு முறையொன்று ஏற்படுத்தப்பட்டது. பொதுத் துறையில் சிறுபான்மையினருக்கு 5 சதவீத வாய்ப்பு ஒதுக்கப்பட்டது. 

ஏனைய 95 சதவீதம் சிறுபான்மையினர் உட்பட திறந்த தகுதி அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. எனினும் இந்த நடைமுறையானது உறுதியான நடவடிக்கைக்கு சிறிதளவே உதவியது எனலாம். உண்மை என்னவெனில் இந்த நடைமுறையானது சமூகப்பாகுபாடு, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிக்கவே செய்தது.

ஏன் இந்த நிலைமையெனில், சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட வாய்ப்புகளில் துப்புரவுப் பணியாளர்போன்ற வேலைகளிலேயே அமர்த்தப்பட்டனர். சில சமூகங்களில் முஸ்லிம்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க தேவையில்லையென்று அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன. 

சொத்து கையகப்படுத்தல்

சுதந்திரத்துக்குப் பின்னர், சொத்துக்களைப் பராமரிக்க சமஸ்டி சட்டத்தின் கீழ், வெளியேறுவோர் நம்பிக்கை நிதியம் என்ற பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத்தலங்களை பராமரிக்கும் வகையில் இது நிறுவப்பட்டது. 

அத்தகைய நோக்கத்தில் அந்த நிதியம் நிறுவப்பட்டபோதிலும் நடைமுறையில் அது முறையாக செயல்படவில்லை. இந்த சொத்துக்களை விற்கவோ, வாடகைக்கு அமர்த்தவோ கூடாது என்று சட்டமிருந்தபோதிலும் நிதியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அவை பராமரிக்கப்படாமலும் பெரும்பாலும் வாடகைக்குக் கொடுக்கப்பட்டும் விற்கப்பட்டும் வந்தன. 

இவை பெரும்பாலும் இந்துக்களுக்கு சொந்தமானவையே. இப்படி ஏராளமான கோவில்கள் விற்கப்பட்டன. தற்பொழுது இந்த நிதியத்தின் கீழ் ஒரேயொரு கோவில்தான் பராமரிப்பிலுள்ளது.

வெளியேறுவோர் நம்பிக்கை நிதியம் வாக்குறுதி அளித்தபடி அதன் நிர்வாகத்தையும், பராமரிப்பையும் முறையாக நிறைவேற்றத் தவறிவிட்டது.