பாரம்பரிய நெல்லினங்கள் அறுவடை

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத் திணைக்கள விரிவாக்கல் பிரிவின் பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் கீழுள்ள களுமுந்தன்வெளிக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் உபஉணவு பயிற்செய்கை அறுவடை விழா, விவசாயப் போதனாசிரியர் பரமேஸ்வரன் சகாப்தனின் ஒழுங்கமைப்பில் வியாழக்கிழமை(02) நடைபெற்றது.