பிக் மீ சாரதி மீது தாக்குதல்

திருநெல்வேலி – பலாலி வீதியில் பிக் மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல் மேற்கொண்ட  சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்காக சென்றபோது பொலிஸாரும், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துகொண்டதாக  பாதிக்கப்பட்ட பிக் மீ சாரதி கவலை வெளியிட்டுள்ளதுடன், பிக் மீ நிறுவனத்திற்கும் தகவலளித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த நிறுவனம் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளதையடுத்து, சாரதியை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு திங்கட்கிழமை (20) அழைக்கப்பட்டு முறைப்பாடு பெறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply