பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா

இந்தியாவில் சமீப நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதைப்போல நாடு முழுவதும் தடுப்பூசி பணிகளும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. அந்தவகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வேகமாக நடந்து வரும் தடுப்பூசி பணிகளால்

நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை எட்டிவிட்டது.இந்த சூழ்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை மேலும் வேகப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை அவர் வழங்குகிறார்.

இந்நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை கூட்டத்தை மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார்.

தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் பிரதமர் மோடி நடத்தும் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டர் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.