பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று காலை 7.30 மணியளவில் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சிறப்பு விமானம் மூலமாக டெல்லி செல்லும் அவர், இன்று காலை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். டெல்லியில் கட்டப்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கட்சியின் அலுவலகத்தையும் அவர் பார்வையிடுவார்.