பிரம்பு சார் தொழில் முயற்சியாளர்களுக்கு இலவச பயிற்சி

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க, குறித்த பயிற்சிநெறியை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல், பனம் பொருள் கைப்பணியாளர் சங்க அங்கத்தவர்களுக்காக பத்தினிபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, பிரம்பு சார் உற்பத்தியில் ஈடுபடும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக  இந்த  இலவச பயிர்ச்சிநெறி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த பகுதியில் பனை உற்பத்திசார் கைப்பணி பொருட்கள் உள்ளிட்ட சந்தைப்படுத்தல் நிலையமும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் தேசிய அருங்கலைப் பேரவையின் உதவி மாகாணப் பணிப்பாளர் பொன்கரன், கிராம சேவகர் நேசராஜ்குமார் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தங்கரூபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.