இந்த நிலையில், புதிய தேர்தல் அறிவிப்பு பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வெற்றியாகக் கருதப்படுகிறது. என்றாலும், டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதை நாடாளுமன்ற மேலவை உறுதி செய்ய வேண்டும். இந்த வார இறுதிக்குள் அது சட்டவடிவமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டை ஒருமைப்படுத்தவும், பிரெக்சிட் உடன்பாட்டை மேற்கொள்வதற்கும் உரிய தருணம் இது என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.