பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல்

ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், தாக்குதலாளி எனக் கருதப்படுபவர், ஆயுதந்தரித்த பொலிஸரால் சுடப்பட்டதாக, சபாநாயகர் டேவிட் லிடின்ங்டன் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில், குறைந்தது ஐந்து பேர், காரால் மோதப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒரு பெண் இறந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஏனையவர்கள் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மூன்று அல்லது நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பிரதமர் தெரேசா மே பாதுகாப்பாக நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தற்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளர்.