பிளந்தது இ.தொ.கா: முக்கியபுள்ளி சஜித்துடன் இணைந்தார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார் மத்திய மாகாண சபையின் உப தவிசாளராக இரண்டு தடவைகளும், அவைத் தலைவராக பதவி வகித்தவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளரும், 25 வருடங்களுக்கும் மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள துரை மதியுகராஜா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று(14) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.