பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பிபோட்டு, பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுக்கிற அரசியவாதிகள் நீங்கள்..!! சுரேஸ்மீது – ரிசாட் பதிதியூன் பாய்ச்சல்

“இரண்டரை வருட ஆட்சிக்காலத்தில் வடக்கு முஸ்லீம்களுக்கு ஒரு மலசலகூடத்தைக்கூட கட்டிக்கொடுக்காத விக்கினேஸ்வரன் ஐயா, அரசு நியமித்துள்ள செயலணிக் குழுவை நிராகரிப்பதாக கூறுகின்றார்.
மீள்குடியேற்றம் மத்திய அரசு செய்கின்ற பணியாகும். அந்த மக்களிற்காக வடக்கு மாகாணசபை அதுவரை எந்த ஒரு பணியையும் செய்யவில்லை” என அமைச்சர் ரிசாட் பதிதியூன் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை அந்த மக்கள் குறித்து தம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட வரவில்லை. இப்போது தம்மைக்கேட்டுத்தான் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்” என்றார்.


அதற்குப் பதிலளித்துப்’பேசிய EPRLF சுரேஸ் பிரேமச்சந்திரன் “எடுத்த எடுப்பில் பொய் கூறக்கூடாது, ஒன்றும் நடக்கவில்லை என்று கூறக்கூடாது. முஸ்லீம் மக்களைத் துரத்தியது பிழை என்று ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது சிங்களக் குடியேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு அமைச்சரவை அணியே தவிர, இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக என்று நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடக்கு மாகாணசபை அங்கத்துவம் பெறாத இத்தகையை செயலணியை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது”.. என்றார்.

அதன்போது சுரேஸ் பிரேமச்சந்திரனின் பேச்சினால் சினமடைந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் “நான் பொய் சொல்லுறன் எண்டு அவர் சொல்லுகிறார், என்ன பொய் எண்டு சொல்ல வேண்டும். நீங்கள் கௌரவமா நடந்து கொள்ளுங்கோ” என்றார்.

மீண்டும் அதற்கு பதிலளித்துப்பேச சுரேஸ் பிரேமச்சந்திரன் முற்பட்டபோது, “ஐசே, நீங்கள் நிராகரிக்கப்பட்ட ஒருவர், நீங்கள் ஆயுதம் தூக்கி எல்லாரையும் சுட்டுக்கொண்ட ஆக்கள். நீங்கள் தமிழ் மக்களுக்கு அநியாயம் செய்த ஆக்கள், பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுப்பதுபோல நீங்கள் தமிழ் மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்யிற ஆக்கள், உங்களால தமிழ் மக்களை ஏமாத்தி அரசியல் நடத்த முடியும் முஸ்லீம்களை ஏமாற்ற முடியாது” என கடும்தொனியில் பேசினார் அமைச்சர்.