புதிய கூட்டணியின் பெயர் அடுத்த வாரம்

10 சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் பெயரை எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த 10 கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இரவு நடைபெற்ற கலந்தரையாலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.