புத்தளம் -மன்னார் பழைய வீதிக்கு பூட்டு

மழை காரணமாக, கலா ஓயாவின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதுடன், இன்று(14) கலா ஓயா பெருக்கெடுத்ததையடுத்து, குறித்த வீதியுடனான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் அலஹகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையடுத்து, மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி பயணிப்போரும், புத்தளத்திலிருந்து மன்னார் நோக்கி பயணிப்போரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.