’புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு ஆரம்பம்’

தொடர்ந்து கருத்துரைத்த அவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிகிச்சை நிலையமானது, மத்திய சுகாதார அமைச்சால் திறந்து வைக்கப்பட்டு, தற்போது குறித்த சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருவதோடு வடக்கின் பல பகுதிகளிலும் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், வைத்தியசாலையில் பணியாற்றும் பணியாளர்கள் கடமை நேரத்தின்போது சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உள்ளதாகவும் அது தொடர்ச்சியாக நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.