புரெவியால் 15 வீடுகள் முற்றாக சேதம்

புரெவி புயல் காரணமாக நாட்டில் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் நால்வர் காயமடைந்துள்ளனர் எனவும் அரத்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 192 வீடுகள் பகுதியளவில் தேமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.