புறப்படும் புதுப் புரளிகள்: ‘பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்’

இறுதி யுத்தத்தின் போது மரணமடைந்து விட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும், கரும்புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதியுமான பொட்டு அம்மான் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன், மறைந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில், தமிழ் நாட்டிலேயே அவர், தலைமறைவாக வாழ்வதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், குருடீ என்ற பெயரிலேயே தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளையுடன் வாழ்வதாகவும் அச்செய்தி குறிப்பிடுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மான், முல்லைத்தீவு நந்திக்கடலில் பலியாகிவிட்டதாக இறுதி யுத்த காலத்தில் பிரசாரப்படுத்தப்பட்டிருந்தாலும், அவருடைய சடலத்தைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொட்டு அம்மான் மரணமடைந்ததை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளை, இந்திய அரசாங்கத்துக்கு அனுப்புவதற்கு முன்னைய அரசாங்கத்தினால் முடியாமல் போய்விட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் வினவியபோது, அது தொடர்பில் அறிக்கை கிடைக்கவில்லை என்றார்.

இதே போல் ஹிட்லர் உயிருடன் உள்ளார் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்ற புரளிகளும் கடந்த காலங்களில் கிளம்பியிருந்ததும் இங்கு நினைவு கூரத்தக்கது. அப்போ பிரபாகரன் அம்போ தானே….?