புலிகளுக்குள் ஜனநாயம் முளையில் கிள்ளப்பட்டது

1985 இல் புலிகளின் 3வது பயிற்சி முகாமில் புலிகளின் ஜனநாயக விரோத போக்குகளிற்கு எதிராகவும் சுத்த ராணுவாத கட்டமைப்புக்கு எதிராகவும் கேள்வி கேட்ட போராளி கொல்லப்பட்டமைக்கு எதிராகவும் தன் சுய நலத்திற்க்காக கல்யாணம் செய்யக் கூடாது என்ற அமைப்பு விதியினை மாற்றி பிரபாகரன் திருமணம் செய்து கொண்டமைக்கு எதிராகவும் பலர் அதிருப்தி அடைந்து வெளியேறினார்கள். அதில் தயாநிதி (இயக்கப் பெயர் ரு+பன்) – கப்புதூ – நெல்லியடி தன்னுடன் வெளியேறிய பலருடன் சேர்ந்து மீண்டும் செயற்படும் நோக்கில் செயற்பாடுகளை மேற்க் கொண்டார். இவர் வேதாரணியம் சென்ற வேளை பொட்டனால் ரகசியமாக கடத்தப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் வெட்டிக் கொல்லப்பட்டார்.