‘பேச்சுவார்த்தையின் இறுதியில் வேட்பாளர் மாறலாம்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடையும்போது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இல்லாமல் போவதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.