பொன்னாங்காணி பறித்தவர் முதலை தாக்குதலில் பலி

நேற்று மாலை (22) நடந்த இந்தச் சம்பவத்தில், சம்மாந்துறை கோரக் கோயில் பிரதேசத்தை சேர்ந்த  61 வயதுடைய இராசாப்பு சௌந்தராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.  இந்த மரணம் குறித்து கல்முனை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.  சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

இதேவேளை, முதலைத் தாக்குதலில் உயிரழந்தவருக்கு நட்டஈடு கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை, பிரதேச செயலக அதிகாரிகள் இன்று (23) காலை 10 மணியளவில் பார்வையிட்டனர்.