பொலிகண்டியில் நாட்டப்பட்ட “இரண்டு கற்கள்” குழப்பம் – நடந்தது என்ன?

பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் தொடங்கி நடைபெற்று முடிந்த போராட்டத்தினை தங்களது போராட்டமாக முடித்துவைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் சாணக்கியன் பொலிகண்டியில் கல் ஒன்றை நாட்டிவைத்தமையாலேயே குழப்பம் ஏற்பட்டதாக சம்பவத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்தனர்.