கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 25-35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகிய நாள் முதல் இன்று வரை ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற 393 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் பெரும்பாலானோர் மேல் மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.