போராட்டக்காரர்களின் நாளைய திட்டம்

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் உருவச் சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் தூரத்துக்கு உள்நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பைத் திரும்பிப் பெற வேண்டுமென கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் நாளை (21) கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.