போராட்டக்காரர்கள் – சஜித் சந்தித்து பேச்சு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் இன்று(18) பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கலந்துரையாடியுள்ளனர். இதன்போது,  போராட்டக்காரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்